துபாயில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இலங்கையைச் சேர்ந்த குழுவென்றை துபாய் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன
துபாயிலிருந்து வெளியேறுவதற்காக போலி விமானச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அத்துடன் இக்குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் சில இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment