சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் பொலிசு நிலையங்களில் உரிய மரியாதையோடு நடாத்தப்படல் வேண்டும். இதற்கான ஒழுங்கு விதிகளை பொலிசு மா அதிபர் வெளியட்டுள்ளார். இதற்கேற்ப, தனது கட்சிக் காரரான சந்தேக நபர் சார்பின் பொலிசு நியைத்துக்கு வரும் சட்டத்தரணிகளை பொலிசார் அன்புடனும் மரியாதையுடனும் நடாத்த வேண்டும். அந்தச் சட்டத்தரணிக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ பொலிசார் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அந்த விதிகள் கூறுகின்றன.
தேசிய அடையாள அட்டை மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு சட்டத்தரணிகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். போலுஸ் மா அதிபரின் இந்த பணியை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் எதிர்கட்சி பா.உ. மாகிய விஜேதாச ராஜபக்ஷ வரவேற்றுள்ளார். ...............................
No comments:
Post a Comment