வடக்கு கிழக்கு நீதி மன்ற கட்டிங்களின் புத்தெழுச்சி.
நீதித்துறை நிறுவனங்களைப் பலப் படுத்துவதற்காக வடக்கு கிழக்கிலுள்ள சகல நீதிமன்றக் கட்டிடங்கள், நீதித்துறை அலுவலர்களின் விடுதிகள் என்பவற்றை மறுசீரமைக்கவும், அத்தகைய புதிய கட்டியங்களை அமைக்கவும் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது என்று நீதியமைச்சின் சிரேட்ட உதவிச் செயலாளர் ஏ.கே.டி.டி.அரந்தல தெரிவித்துள்ளார்.
ஐலன்ட் நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அவர், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை மற்றும் மல்லாகத்தில் நீதவான் மற்றும் மாவட்ட நீதி மன்றங்களை அமைக்க தலா 175 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அனைத்து நீதி மன்றக் கட்டிடத் தொகுதிகளும் , குச்சவெளியின் நீதி மன்றக் கட்டிடமும் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு உதயமாகும் போது அவை திறந்து வைக்கப்படும் என்றும் கூறிய அவர் கிளிநொச்சியில் புலிகளின் சட்டக் கல்லூரியாகத் திகழ்ந்த கட்டிடம் நீதவான் மற்றும் மாவட்ட நீதி மன்றக் கட்டிடமாக மாற்றியமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment