சிறைச்சாலை கூரையில் ஏறி நின்று விளக்கமறியல் கைதிகள் சிலர் சத்தியாகிரகம்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையில் ஏறி நின்று விளக்கமறியல் கைதிகள் சிலர் இன்று (19) காலை முதல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
.
பாலியல் வல்லுறவு ,போதைப் பொருள் பாவனை, கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிலாபம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியல் வைக்கப்பட உத்தரவிடப்பட்ட கைதிகள் 21 பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியே விளக்கமறியல் கைதிகள் 21 பேரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈ:டுபட்டனர்.
பிற்பகல் வேளையில் சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதிகளிடம் கீழே இறங்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து, கைதிகள் கூரையில் இருந்து இறங்கியதுடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 300 வரையான விளக்கமறியல் கைதிகள் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரவித்தார்.
0 comments :
Post a Comment