Wednesday, June 6, 2012

பிரித்தானியவிலிருந்து கணவனை கொல்ல கொந்தராத்து கொடுத்த மனைவி! இருவர் கைது.

திருகோணமலை ஐயனார் கேணிப்பகுதியில் 28 வயதான நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பின்னணியில் இருந்த மூன்று சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் விமான ஓட்டியென குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கிறது. இளைஞனின் மனைவி பிரித்தானியாவிலிருந்து வழங்கிய ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் கொலையை புரிவதற்கு கொலை செய்யப்பட்டவரின் மனைவி 1750 பவுணை ஒப்பந்தப் பணமாக வழங்கியுள்ளாதாகவும் இவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கையொன்று வழங்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 18 ஆம்திகதி திருகோணமலை பொலிஸ் பிரிவில் 28 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு பின்னர் அரச தரப்பினர்கள் அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் மீது புலம்பெயர் தமிழர்கள் படுகொலை தொடர்பாக குற்றம் சுமத்தி வந்தனர்.  

அத்துடன் மீண்டும் இலங்கையில் படுகொலை மற்றும் ஊழல் கலாசாரம் தலை தூக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். எவ்வாறாயினும் இநத சகல விடயங்களையும் உண்மைக்கு புறம்பானவையென நிருபித்த குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த படுகொலையுடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை இன்று அதிகாலை கைது செய்தது.

இவர்கள் கொழும்பை வசிப்பிடமாக கொண்ட சகோதர இன இளைர்களாவர். இவர்களில் ஒருவர் விமான ஓட்டி என்பதும் தெரியவந்துள்ளது.  

படுகொலையாளியான இந்த விமான ஓட்டி பிரித்தானியாவிற்கு சென்றபோது கொலைசெய்யப்பட்டவரின் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட கிரிக்கட் வீரரின் மனைவி தொடர்பாக சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com