ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேஸிலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
கியூபாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை பூர்த்தி செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேஸிலுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஐ.நா நிரந்தர அபிவிருத்திக்கான ரியோ 20 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரேஸிலுக்கு சென்றுள்ளார்.
ஐ.நா நிரந்தர அபிவிருத்திக்கான ரியோ 20 மாநாடு இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பிரேஸிலின் தலைநகரான ரியோடி ஜெனீரோவில் இடம்பெறவுள்ளது. இதில் 130 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்குபற்றுகின்றனர்.
ஜனாதிபதி இங்கு விசேட உரையாற்றவுள்ளதுடன் இலங்கை தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார்.
0 comments :
Post a Comment