கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதாவும், தமது கட்சிக்கு முதலமைச்சர் பதவி தராவிட்டால் தாம் அரசாங்க்கதுடன் இணைந்து போட்டி யிடப் போவதில்லை எனவும் அக்கட்சின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவிக்கின்றார்.
இதே வேளை தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், தமது கட்சி அதிக விருப்பு வாக்குகள் பெற்றதனால்தான் முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது எனவும், முஸ்லிம் காங்கிரசுக்கு அவ்வாறு அதிக மக்கள் செல்வாக்கு இருக்குமாயின், ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாது விரும்பியவாறு வேட்பாளர்களை நிறுத்தி முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment