ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப் பட்டுள்ள நேட்டோ அமைப்பின் யுத்த தளபாடங்களை தமது நாட்டிக்கூடாக எடுத்து செல்ல மூன்று மத்திய ஆசிய நாடுகள் நேட்டோ அமைப்புடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.
அமெரிக்க சரக்கு வாகனங்கள் தமது நாட்டினூடாக, பயணிப்பதை பாகிஸ்தான் அண்மையில் தடை செய்ததன் பின்னர், நேட்டோ அமைப்பின் யுத்த தளபாடங்களை ஆப்கானிஸ் தானிலிருந்து வெளியே எடுத்துச்செல்வது தொடர்பாக, பல்வேறு பிரச்சினைகளுக்கு நேட்டோ அமைப்பு முகம்கொடுக்க நேரிட்டது
இதுதொடர்பாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடாத்திய போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை.
இதற்கு தீர்வாகவே, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நேற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இதற்கமைய, தமது இராணுவம் உட்பட யுத்த தளபாடங்களை அந்த நாடுகளுடாக வெளியேற்றுவதற்கு, நேட்டோ அமைப்பு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment