அண்டை நாடு ஒன்று எமது வழங்களை அள்ளிச்செல்கின்றது. ஜனாதிபதி
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 'இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு'' என்ற தலைப்பில் ஐ.நா.சபை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து பேசுகையில் இலங்கையின் இயற்கை வளங்களில் ஒன்றான மீன் வளத்தை அண்டை நாடு ஒன்று வேண்டுமென்றே அள்ளிச் செல்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது,
இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள அண்டை நாட்டு மீனவர்கள் வேண்டும் என்றே இலங்கை கடல் பகுதிக்குள் வருகிறார்கள். இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி சிறு மீன் குஞ்சுகளைக் கூடப் பிடித்து மீன்வளத்தை அள்ளிச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் பாக் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்களையெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் கடல் வளத்தை காக்க பாக் ஜலசந்தியை பிரச்சனைக்குரிய பகுதியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை கடற்பரப்பில் வந்து மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிறகு பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்கப்படுகிறார்கள். பாக் ஜலசந்தியில் உள்ள கடல் வளம் எங்களுக்கே சொந்தம். எனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சர்வதேச கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி அண்டை நாடு எனக் குறிப்பிட்டிருப்பது இந்தியாவாகவே இருக்கவேண்டும். இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைவதும் அவர்கள் படையினரால் கைதாகும்போது அரசியல் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளமை யாவரும் அறிந்ததே.
2 comments :
He is right and told the true.
ருசிகண்ட பூனைகள் எப்போதும் அடுப்பங்கரையைத்தான் நாடும் என்பது உண்மை. அதனால் நம்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரங்கள் அழிக்கப் படுகிறது என்ற கொடுமையை, செய்பவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்? தமக்கென்று எல்லையுண்டு, அதனுள் தூண்டிலைப் போடுவதை விட்டு அயலவன் எல்லைக்குள் நுழைவதால் அடுத்தவர் வயிற்றில் அடிக்கிறோம் என்பதை உணர்ந்து தமது எல்லையுள் தமக்கான மீன்களைப் பிடித்துச் செல்லுங்கள் என்பதை ஜனாதிபதி அழகாகக் கூறியது இலங்கை மீனவர்க்கு மனபலத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் சூடு கண்ட பூனைகள் இனியும் அடுப்பங்கரையை நாடாது என்று நம்புவோமாக
அன்புடன்,
கனகண்ணா
Post a Comment