கத்திமுனையில் தங்கச்சங்கிலியை கொள்ளையிட முயன்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் மரணம்
நீர்கொழும்பு; தளுபத்தை பிரதேசத்தில் ஒருவரின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட முயன்றபோது பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் நேற்றிரவு மரணமாகியுள்ளார்.
மலிதூவ, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த சுஐத் சஞ்சீவ புஸ்பகுமார
என்பவரே கொழும்பு தேசிய வைத்தியசலையில் சிகிச்சை பலனின்றி மரணமானதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய சந்தேக நபரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக நிரோசன் ஹேரத் பொலிஸ் பாதுகாப்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு; தளுபத்தை பாலம் அருகில் உள்ள வீடொன்றிற்கு கடந்த வெள்ளிக் கிழமை முற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த வீட்டின் உரிமையாளர் அணிந்திருந்த 5 பவுண்கொண்ட நகையை கொள்ளையிட முயன்ற போதே பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டில் வளர்க்கப்படுவதற்காக நாய்கள் விற்பனை செய்யப்பபடுகின்றன. நாய்கள் வாங்க வந்தவர்களை போன்று வந்த இளைஞர்களே திடீரென்று வீட்டுரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கத்தியினால் அறுத்தெடுத்து கொள்ளையிட முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை; ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment