முடிவுக்கு வந்தது கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தமது பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது சம்பள உயர்வுப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்மை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment