உலக்கையாக இருந்து உளிப்பிடியாகி வரும் உயர் பாதுகாப்பு வலயங்கள். ஹத்துறுசிங்க
போருக்குப் பின்னர் படிப்படியாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து படைகளை அகற்றி வருவது தேசிய இணக்கப்பாட்டின் ஒரு அம்சமே தவிர யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் அல்ல என்று யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க ஐலண்ட் செய்தியிதழுக்குத் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக் கட்டத்தில் 50,000 ஆக இருந்த யாழ் குடாநாட்டு ராணுவம், தான் 2009 திசம்பரில் அங்கு பதவி ஏற்றபோது 27000 ஆக இருந்தது என்றும், தற்போது அது 15600 ஆகக் குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
4096 ஹெக்டேரில் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியதாக இருந் உயர் பாதுகாப்பு வலயம் இன்று 1515 ஹெக்டேரைக் (40மூ) கைவிட்டு 2582 ஹெக்டேராகச் சுருங்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல்.பீரிஸ் இதுபற்றி விரிவான அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அண்மையில் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் போர் இடம் பெற்ற பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் பற்றி ஜனாதிபதியோடு முரண்பட்டிருந்தார். இது தொடர்பாக அவரை வெளிநட்டமைச்சுக்கு அழைத்த பேரா. ஜி.எல்.பீரிஸ் அரசாங்கத்தின் கவலையை வெளியிட்டார்................................
0 comments :
Post a Comment