மரங்கள் மற்றும் தளபாடங்களை எடுத்துச்செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த சட்ட விதிகளை தளர்த்துவதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கு, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அனுமதி வழங்கியுள்ளார்.
இதன் பிரகாரம், கொழும்பு மாவட்டம் தவிர, ஏனைய மாவட்டங்களில் கருவேளம், வெண்சந்தனம், உள்ளிட்ட முக்கிய மரங்கள் உட்பட ஏனைய மரங்களினால் தயாரிக்கப்பட்ட தளபாடங்களை எடுத்துச்செல்லும்போது, அனுமதிப்பத்திரங்கள் பெற வேண்டிய அவசியமில்லை என அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சகல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் மாநகர சபை எல்லைகளில் கறுவேளம், வெண்சந்தனம், உள்ளிட்ட மரக்குற்றிகள், மரப்பலகைகளை தவிர ஏனைய அனைத்து மரங்கள் மற்றும் மரக்குற்றிகளை எடுத்துச்செல்வதற்கு, அனுமதிப்பத்திரம் தேவையாகும்.
அத்துடன், இம்மரங்களினால் தயாரிக்கப்பட்ட தளபாடங்கள், விறகு போன்றவற்றை எடுத்துச்செல்வதற்கு, மாநகர சபை எல்லைக்குள் அனுமதிப்பத்திரம் தேவையில்லையென, சுற்றாடல் அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி , மேல் மாகாணம் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கு மட்டுமல்லாமல், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் உள்ளுராட்சி மன்ற எல்லைகளுக்குள் மரங்களை போக்குவரத்து செய்யும்போது, அமுலில் இருந்த சட்டவிதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment