ஜனாதிபதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வவே நாடாளுமன்றம் பயன்படுத்தபடுதாம்- லால் காந்த
ஜனாதிபதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதிக்குத் தேவையானவை மாத்திரமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலாபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பிரேணைகளை பிரதமர் மாத்திரமே நடைமுறைப்படுத்தி வந்தார். எனினும், இன்று நிலைமை மாறியுள்ளது எனவும் லால் காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதிக்குத் தேவைப்படும் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமானால் மாத்திரமே அவர் நாடாளுமன்றம் வருவார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் எந்தவித வாதப்பிரதிவாதங்களையும் முன்வைக்காமல் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைக்கு கையை மாத்திரம் உயர்த்துகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே.டி. லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment