தற்போது உலகளாவிய ரீதியில் கருத்திற் கொள்ளப்பட்டுள்ள பசுமைப் பொருளாதார முறை இலங்கைக்கு புதியதொன்றல்ல என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இதிகாச காலத்திலிருந்து இது இலங்கையில் அமுலில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் தேசிய கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பசுமைப் பொருளாதாரம் - நீங்களும் அதன் பங்காளி என்ற தலைப்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
வைபவங்களில் இணைந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிடுகையில், சுற்றுச்சூழல் தொடர்பாக பாடத்திட்டத்தில் சேர்ப்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
No comments:
Post a Comment