சரத் பொன்சேகா மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது. அப்படியான வாய்ப்பு ஏற்பட்டால் எந்த வேளையிலும் தான் தனது பாராளுமன்ற எம்.பி.பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக, முன்பு அவருக்குப் பதிலாக எம்.பி.யாகிய ஜயந்த கெட்டகொட கூறுகின்றார். பொன்சேகாவுக்கு முழு அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஐ.தே.க. கொண்டு வரவிருந்த பிரேரணைக்கு ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது, அரசாங்க சார்பில் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராவதற்கு அல்ல என்றும் அக்கட்சியின் எம.பி.யான கெட்டகொட மேலும் தெரிவிக்கின்றார்.
இதே நேரத்தில், காலி மாவட்ட அரசாங்க கட்சி எம்.பி.யான நிசாந்த முத்துஹெட்டிகம பொன்சேகாவை ஜனாதிபதியுடன் இணைந்து அரசியல் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தது தெரிந்ததே.
No comments:
Post a Comment