கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை சீ பிளேன் கடல் விமான சேவை நடத்த நடவடிக்கை
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை சீ பிளேன் கடல் விமான சேவை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரீட்சார்த்தமாக இன்று காலை மட்டக்களப்பு வாவியில் சீ பிளேன் விமானம் தரையிறக்கப்பட்டது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில், விமான நிலைய அதிகார சபையின் அதிகாரிகளை மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாசலுக்கு எதிரே உள்ள வாவியில் விமானம் இறக்கப்பட்டு கடற்படை இயந்திர படகுகள் மூலம் அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பு சீதுவை பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்தே விமானம் புறப்பட்டதாகவும் பரீட்சார்த்த பணிகள் நிறைவடைந்ததும் மட்டக்களப்பு பாசிக்குடா பகுதிக்கு கடல் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அபிவிருத்தி முகாமையாளர் சஞ்ஜீவ ஜயகொடி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment