பெல்ஜிய நிதிமன்றில் புலி உறுப்பினருக்கு தண்டனை
மிச்சம் மீதியாகவுள்ள விடுதலைப் புலிகள் பெல்ஜிய மண்ணை தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பெல்ஜிய அரசு விழிப்புடனிருப்பதற்கு பெல்ஜியம், லக்ஸம்பேர்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தூதுவராக இருக்கும் ரவீநாத் ஆரியசிங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனது பிரியாவிடையை முன்னிட்டு கடந்த வாரம் பெல்ஜிய நாட்டு வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த போதோ இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளி எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் அண்மையில் ஆட்கடத்தல், பணக்கொள்ளை மற்றும் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் என்பவற்றுக்காக அன்ட்வேப் நீதிமன்ற்றதில் குற்றவாளியா அடையாளம் காணப்பட்டு பெல்ஜிய நிதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதை ஆரியநிங்க வரவேற்றுள்ளார்.
அத்துடன் பிரான்சு, ஒல்லாந்து, ஜெர்மனி நாடுகளைத் தொடர்ந்து பெல்ஜியமும் எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்களை நீதி மன்றங்களுக்கு இழுத்து வந்து உரிய தண்டனை வழங்க ஆரம்பித்துள்ளது. இலங்கையில் எல்.ரி.ரி.ஈ ஒழிக்கப்பட்டு விட்டாலும் மேற்கு நாடுகளில் உள்ள அவர்கள் தங்களது சட்ட விரோத செயல்கள் ஊடாக இலங்கைகு எதிரான நிலைபாட்டை அந்த நாடுகளில் ஏற்படுத்த முயன்று வருகின்றனர் என்று ஆரியசிங்க குறிப்பிட்டார்.
யுத்தம் முடிந்த கையோடு 40 பேர் கொண்ட வர்த்தக்க் குழுவை இலங்கையில் தமது வர்த்தக முயற்சிகளை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை சுட்டி காட்டிய தூதுவர் பெல்ஜியத்திலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment