Wednesday, June 20, 2012

அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது.

"அவ்வாறு இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் எவ்வாறு மேதின கூட்டத்தை நடத்த முடியும்"? அமைச்சர் நிமல் சிறிபால

அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திரமாக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய சூழ்நிலை நாட்டில் காணப்படுவதாகவும், அவ்வாறு இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வாறு யாழ்ப்பாணத்தில் மேதின கூட்டத்தை நடத்த முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்கட்சியிடம் பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பியுள்ளார்

அவர் பாராளமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் பருத்திதுறைமுனை முதல் தேவேந்திர முனை வரை அனைத்தின மக்களும் இனமத பேதமின்றி நாடெங்கும் பயணம் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தற்போது அச்சுறுத்தல் மிக்க சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவல் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருட இருண்ட யுகத்தை மறந்து ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதை நான் கவலையுடன் தெரிவிக்கின்றேன்.

கடந்த 30 வருட காலங்களில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு வடக்கில் செயல்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தினால் உதுருவாக்கப்பட்ட அமைதி சூழ்நிலை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதின கூட்டத்தை நடத்தியமை இலங்கையில் தற்போது அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

கவலைக்குரியதும் அச்சுறுத்தல் மிக்கதுமான சூழ்நிலையொன்று நாட்டில் காணப்படுமானால் வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியினால் மேதின கூட்டத்தை நடத்த முடியுமா என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகின்றேன். இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்கடசிகள் செயல்படுவது தொடர்பாக நாங்கள் கவலையடைகின்றோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment