நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஓரு கட்டமாகவே பாடசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment