Monday, June 18, 2012

வரட்சியான காலநிலை தொடருமானால் மின்வெட்டாம்

நாட்டில் வரட்சியான காலநிலை தொடருமானல் மின் வெட்டு அமுல்படுத்தவேண்டிய நிலை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 10 வருட காலநிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மழை வீழ்ச்சியின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நீர்மின் உற்பத்தி நிலையங்களில் தொடர்ச்சியான நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதோடு, இந்த நிலை தொடரும் பட்சத்தில் அனல் மின்நிலையங்களின் மின் உற்பத்தி மட்டத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் காலி மாத்தறை அம்பாந்தோட்டை குருணாகல் பிரதேசங்கிளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com