Friday, June 15, 2012

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக கோட்டாபய ஜயரத்ன நியமனம்

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த எச்.எம்.குணசேகர உடனடியாக அமுலாகும் வகையில் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ஜயரத்ன, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைக் கொண்டவராவார்.

இவர் கண்டி மாவட்ட அரச அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதுவரை காலமும் வீடமைப்பு மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சின் செயலாளராக கோட்டாபய ஜயரத்ன கடமையாற்றி வந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com