பொலிவியாவில் போலீஸ் கலவரம்: நாட்டை கைப்பற்றப்பட்ட திட்டம்:ராணுவம் குவிப்பு
பொலிவியாவில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக பீதி பரவியதைத்தொடர்ந்து ராணுவப்படைகள் தயார்நிலையில் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் அதிபராக ஈரேவாமார்லஸ் உள்ளார்.
பொலியாவில் போலீசாருக்கு சொற்ப அளவில் தான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசுக்கு இவர்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் போலீசார் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற போராட்டம் நடத்தினர். இவர்கள் முகமூடி அணிந்து கொண்டு, ஆயுதங்களுடன் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்
பின்னர் பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடப்பட்டு வருகின்றனர். இவர்கள் 7 சதவீதம் சம்பள உயர்வு, போலீஸ் தலைமை அதிகாரி கர்னல் விக்டர் மால்டோனோ பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வருகின்றனர்.. தற்போது போராட்டம் நாடுமுழுவதும் பரவியுள்ளநிலையில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆட்சியை கைப்பற்றிடக்கூடும் என்ற பீதி நாடு முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடுமுழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு , பெருநகரங்களான சான்டா குரூஸ், கோச்சபாம்பா, ஒராரூ ஆகிய நகரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடுமாறு ராணுவத்தினருக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபென்சவேட்ரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பொலிவியாவில் பரபரப்பு காணப்படுகிறது.
0 comments :
Post a Comment