Monday, June 25, 2012

பிரதி அமைச்சர் பதவி வேண்டாம் என்கிறார் சனத் ஜயசூரிய

அரசாங்கத்திடம் தான் எந்தவித பிரதி அமைச்சர் பதவியையும் கேட்கவில்லை எனவும், இதற்கு முன்னர் தான் எழுத்து மூலமாக கேட்டதை வாபஸ் பெறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர் சனத் ஜயசூரிய கடந்த சனிக்கிழமை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் பதவியோ வேறு எந்த பதவியையோ தாம் எதிர் பார்க்கவில்லையென குறிப்பிட்டு சனத் ஜயசூரிய ஜனாதிபதி மாளிகைக்கு சென்று கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அத்துடன் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாகவும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக விருப்பு வாக்கு பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாந்த முத்துசெட்டிகம , சரத் வீரசேகர, லக்ஸ்மன் வசந்த பெரேரா மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதியிடம் இதற்கு முன்னர் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment