Wednesday, June 27, 2012

செங்கல்பட்டு முகாம் தமிழர்களின் மரண வாக்கு மூலம்.

இந்திய செங்கல்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்களை விடுவிக்க கோரி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். இவர்களில் நிலைமை மோசமானதை தொடர்ந்து 8 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிக்கும் இலங்கைத்தமிழர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை எனவும் நிறைவேறும் வரை போராடுவோம் அல்லது செத்து மடிவோம் எனவும் கூறியுள்ளனர்.

மருத்துவ மனையில் உள்ள இவர்கள் தமது முடிவு தொடர்பில் மரண வாக்கு மூலம் தாங்களே கைப்பட எழுதி உள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளாவது..
அன்பார்ந்த பத்திரிகை நண்பர்களே,

' எங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் , கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பொறுப்பில்லாத அதிகாரிகளே அதற்கு காரணமானவர்கள்'

இப்படிக்கு ( தமிழில் கையெழுத்து)

ஜெயதாசன், பராபரன் , நர்மதன் , செந்தூரன் , சதீஸ் குமார் , சேகர், செல்வம், செல்வராஜா.

இந்த கடிதத்தை அனைவரும் படிக்கும்படி பகிருங்கள் . உலகம் அறியட்டும்.



இலங்கை அரசு 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலிப்பயங்கரவாதிகளையும் மிகக்குறுகிய காலத்தில் விடுதலை செய்து அவர்கள் வாழ்வதற்கு ஏதவான பல திட்டங்களை வகுத்துக்கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா தனது நாட்டில் தஞ்சம் கோரியோரை மிகவும் மிருகத்தனமாக நடாத்துகின்றது.

இந்தியாவின் இந்த அராஜகப்போக்கை தட்டிக்கேட்பதற்கு வக்கில்லாதவர்களாக இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். இதற்கு காரணம் இவர்கள் இந்தியாவின் அற்ப சொற்ப சலுகைகளைப் பெற்று தாய்நாட்டை காட்டிக்கொடுப்பதேயாகும்.




No comments:

Post a Comment