இலங்கை வங்கியில் 7 ஆண்டு களுக்குமேல் தற்காலிக சாரதிகளாகக் கடமையாற்றியவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் வேலை நீக்குவது அநியாயம் என்று கூறி, தமது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து இலங்கை வங்கி தலைமையகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.
வயது அடிப்படையில் தம்மை நிரந்தரமாக்க முடியவில்லை என்று வங்கி கூறினாலும் வடக்கு கிழக்கில் வயது கடந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் குற்றம் சுமத்தினர்.
No comments:
Post a Comment