ஒருவரின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட முயன்ற இரண்டு இளைஞர்கள் பிரதேசமக்களால் பிடிக்கப்பட்டு நையப்படைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் நிர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நீர்கொழும்பு; தளுபத்தை பாலம் அருகில் உள்ள வீடொன்றிற்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த வீட்டின் உரிமையாளர் அணிந்திருந்த 5 பவுண் நகையை கொள்ளையிட முயன்றுள்ளனர்.
அந்த வீட்டில் வளர்க்கப்படுவதற்காக நாய்கள் விற்பனை செய்யப்பபடுகின்றன. நாய்கள் வாங்க வந்தவர்களை போன்று வந்த இளைஞர்களே திடீரென்று வீட்டுரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்ஙகச் சங்கிலியை கத்தியினால் அறுத்தெடுத்துள்ளனர்.
இதன் போது வீட்டுரிமையாளரின் மகள் சத்தமிடவே அயலில் இருந்த உணவகம் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் ஒடி வந்து இரு இளைஞர்களையும் சிரமப்பட்டு பிடித்துள்ளனர்.பின்னர்அங்கு கூடிய பிரதேசவாசிகள்; அந்த இருவரையும் நையப்புடைத்த பின்னர் நீர்கொழும்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இரு இளைஞர்களையும் கைது செய்ததோடு கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 'பல்சர்' ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் காயமடைந்துள்ளதன் காரணமாக தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை; ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment