Tuesday, June 12, 2012

சுவிஸ் புலிகள் தொடர்பாக விசாரணை செய்ய இலங்கை விரையும் சுவிஸ் பொலிஸார்.

சுவிஸிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் 12 பேரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பணச் சலவை பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுவிஸ் மத்திய அரசாங்க வழக்கு தொடுநர் அலுவலகம் நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் தனது உத்தியோகத்தர்களை அனுப்பவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

சுவிட்ஸர்லாந்து சிறையிலுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் நிதி பொறுப்பாளரை சுவிஸ் அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாக முக்கிய சுவிஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கை சிறையிலுள்ள 35 வரையிலான சிரேஷ்ட தமிழ் புலிகளையும் சுவிஸ் அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் போலி தகவல்களை வழங்கி, சட்ட விரேதமாக பெறப்பட்ட கடன் பணத்தை இலங்கைக்கு அனுப்பி சலவை செய்து உள்நாட்டு யுத்தத்தின்போது ஆயுதம் வாங்க பயன்படுத்தியதாக சுவிஸ் வழக்குத் தொடுநர் திணைக்களம் கருதுகின்றது.

இந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு அனுமதியளித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com