தனது உதவியாளரின் இளவயது மனைவியை வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட தலைமை மேசனுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்;ற நீதிபதி பத்து வருட காலம் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட கடூழியச் சிறை தண்டணையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 70 ஆயிரம் ரூபா நஸ்டயீடாக வழங்கு மாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கே மேற்படி தண்டணை விதிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சீதுவை ரத்தொழுகம பிரதேசத்த்pல் வைத்து 20 வயதுடைய திருமணமான பெண்ணை வல்லுறவு புரிந்ததாக பிரதிவாதி மீத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவம் இடம் பெற்ற அன்று மேசன் வேலை செய்வதற்காக தனக்கு உதவியாளராக இருந்த இளைஞருக்கு அதிக மதுபானத்தை அருந்தக் கொடுத்து போதையுறச் செய்த பின்னர் அந்த இளைஞரின் இளவயது மனைவியை பிரதிவாதி வல்லுறவு செய்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment