இந்தியாவில் விடுதலை புலிகளின் அமைப்பு மீதான தடை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பு
இந்தியாவில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இந்திய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தடையுத்தரவிற்கான கால எல்லையை நீடித்து வருகின்றது.
இந்நிலையில், குறித்த அமைப்பு மீதான தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (31.05.2012) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment