70ற்கும் மேற்பட்ட பஸ்கள் தொடர்பான அறிக்கை யொன்று பாதுகாப்பு செயலாளரிடம் சமர்பிப்பு
யாழ் கொழும்பு வீதியில் அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் 70 இற்கும் மேற்பட்ட பஸ்கள் தொடர்பான இரகசிய அறிக்கையொன்று பாதுகாப்பு செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக, வீதி தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழுவில் யாழ் கொழும்பு பஸ் போக்குவரத்து தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டதனையடுத்து, அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் குறித்த பஸ் வண்டி உரிமையாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 10 நாட்களாக 3 விசேட குழுக்கள் சுற்றி வளைப்பை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 60 வதற்கும் மேற்பட்ட பஸ்கள் வீதி அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படுவது மாத்திரமன்றி, ஒரு சில பஸ்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரும் சேவையில் ஈடுபடுவது தெரியவந்ததுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை பாதுகாப்பு செயலாளருக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கியதன் பிரகாரம் அவ்வறிக்கையை பாதுகாப்பு செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment