Monday, June 11, 2012

பெண்னின் வயிற்றில் கத்தரிக்கோல்: 12 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு

12 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரிக்கோலுடன் வாழும் பெண் ஒருவர் இந்தியாவின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொடைக்கானலை சேர்ந்த ரெஜினாமேரி (வயது 56) என்ற இந்த பெண்மணிக்கு கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதியன்று கொடைக்கானலில் ஒரு தனியார் மருத்துவமனையில் கருப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு வயிற்று வலி ஏற்படும் போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால், ரெஜினாவுக்கு வயிற்று வலி குறையவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதியன்று வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு ரெஜினாவை உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது ரெஜினா வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ரெஜினாவின் மகன் அந்தோணி அசோக் ஸ்டீபன் என்பவர் ஆதாரங்களுடன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலிசார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் டீம் மற்றும் 7 பேர் மீது கடந்த 1-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ரெஜினா தற்போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரெஜினாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகள் எடுத்து உள்ளனர்.

தற்போது அவரது உடல்நிலை ஆபரேசன் செய்யும் அளவுக்கு உகந்ததாக இல்லை என்பதால் இன்னும் ஓரிரு நாளில் வயிற்றில் உள்ள கத்தரிக்கோல் எவ்வாறு அகற்றப்படும் என்பது முடிவு செய்யப்படும் என டாக்டர்கள் கூறினர்.

No comments:

Post a Comment