அண்மையில் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனரத்னவுடன் ஒரு திருமண வைபவ த்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தான் செய்த மாபெரும் தவறு மகிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சித் தலைவராக்கியதே என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் ரணில் விக்கிரமசிங்கவோடு ஒத்துழைக்க எவ்வளவோ முயன்றேன் முடியாது போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு எவ்வாளவோ கஷ்டம் கொடுத்தது. 1600 க்கு அதிகமான முறைப்பாடுகள் எமக்கு எதிராக குவிந்தன என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் இனி அரசியல் செய்யமாட்டேன், யார் பக்கமும் சேரமாட்டேன். விரும்புபவர்களுக்கு அறிவுரை கூறுவேன் என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித, சந்திரிகா அம்மையார் செய்த பெரிய தவறு ஐ.தே.க அரசை 2004ல் கலைத்ததுதான் என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment