ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பிரிட்டிஷ் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபத்தின் வைர விழா கொண்டா ட்டங்களில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மகாராணிக்காக, பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மாவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இரவு விருந்துபசாரத்திற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும், இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமருக்கு எடுத்துரைத்ததாகவு.ம் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைகான உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸூம், இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். இச்சந்திப்பையடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு லண்டனிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
1 comments :
Hon.President MR is doing his best to promote the ties with the west and around the world.He is clever and well expeirenced.Well done.Keep it up.
Post a Comment