அழககோன் விலக்கப்பட்டமை தொடர்பில் டிரான் அலக்ஸ் மீது கண்டனம்.
சிலோன் டுடே செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுமப் பணிப்பாளராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் உட்பட பலர் ஒருதலைப்பட்சமாக சேவையிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானம் செய்ததற்காக, சிலோன் டுடே செய்தித்தாள் நிறுவனத்தின் தலைவர் டிரான் அலஸ் மற்றும் அதன் முகாமையாளருக்கு எதிரான கண்டணம் தெரிவித்து சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
லலித் அழகக்னே மற்றும் கார்ட்டூனிஸ்ட் வசந்த சிரிவர்தன என்போரை சேவையிலிருந்து நீக்குவதாக வாய்மூலமே அறிவித்திருப்பதாகவும் இதுவரை குற்றச்சாட்டுப் பத்திரமோ சேவை நீக்க கடிதமோ வழங்கப்படவில்லை யென்றும் கூறப்படுகின்றது.
இலங்கையில் செய்தி இதழ்கள் வெளியிடுவோர் சங்கம் மற்றும் இதழாசிரியர் சங்கம் ஆகியன முதற் கொண்டு சகல ஊடாக அமைப்புகளும் ஒன்றுகூடி ஆசிரியர் குழாத்தின் சுதந்திரம் மற்றும் வெளியீட்டாளர்களின் உரிமை தொடர்பாக கலந்துரையாடி பொதுக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மேற்படி ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment