Wednesday, June 13, 2012

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் புதிய கருத்தை தெரிவிக்கிறார் தமரா குணநாயகம்.

இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கீழ் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மனிதவுரிமைகள் சபையில் கொண்டு வந்த பிரேரணையைத் தயாரப்பதில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தொடர்புபட்டிருந்தார் எனவும் ஐ.நாட்டிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர் வரும் 18 ம் திகதி ஆரம்பமாகும் ஐநா மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை பற்றிய கலந்துரையாட நிகழ்ச்சி நிரலில் இல்லாது விட்டாலும், கலந்துரையாடல் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் காணப்படுகின்றது எனவும், இலங்கை மீது குற்றம் சுமத்தும் அரசசார்பற்ற அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளதுடன், இலங்கை வெளிநாட்டமைச்சிலிருந்து தமக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட வெளிநாட்டமைச்சு, குணநாயகம் அம்மையார் நேற்று முதல் 20 நாட்களுக்கு விடுமுறை பெற்றிருப்பதாகவும், அவரது ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பதவிக்காலம் ஜுன் 30 வரை மட்டும் தான் என்றும், அதற்குப் பிறகு ரவிநாத் ஆரியசிங்க அநத் பதவியை வகிப்பார் என்றும் அவரே மனிதவுரிமை சபையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துவார் என்றும் வெளிநாட்டமைச்சு, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment