கலாம் குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்த, 15ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நிருபர்களைச் சந்தித்த போது, ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு, "கலாம் என்றாலே கலகம் என்று பொருள்' என, பதிலளித்தார். அவரது பேச்சு முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், ஜவஹர் அலி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக பதவி வகித்தும், தன் வயதுக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தமில்லாமல் அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொண்ட பின், நான் அப்படி கூறவில்லை என்று பல்டி அடிப்பது, கருணாநிதிக்கு கைவந்த கலை.கலாம் என்றால், இறைவனின் வேதம் என்று பொருள். அப்படிப்பட்ட புனிதமான வார்த்தையை கருணாநிதி கொச்சைப்படுத்தியுள்ளார். அரசியலில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இனம், மொழி என்று வரும்போது, அதற்கு ஆதரவாக இருப்பது தான் முறை. ஆனால், கருணாநிதி ஒரு போதும் தமிழ்மொழிக்கோ, திராவிட இனத்திற்கோ நன்மை செய்தது கிடையாது. கடந்த முறை, ஜனாதிபதியாக அப்துல் கலாமை தேர்ந்தெடுத்த பெருமை, முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். அப்போதும் கருணாநிதி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment