கனடா மருத்துவமனையில் இரு நோயாளிகள் படுகொலை!
கனடாவின் மான்ட்ரியல் மருத்துவமனையில் 2 நோயாளிகள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மான்ட்ரியலில் உள்ள நாட்டர் டேம் மருத்துவமனையில் ஜுன் 16ம் தேதி ஒரு கொலை நடந்துள்ளது. இந்த கொலை நடந்து 11 நாட்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதே போன்று மற்றொரு கொலை கடந்த 21ம் தேதி நடந்துள்ளது.
இதே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் 71 வயது மூதாட்டியை கடந்த 22ம் தேதி அங்குள்ள மனநலப் பிரிவில் இருந்த ஒருவர் தாக்கினார். ஆனால் அந்த மூதாட்டி பிழைத்துக் கொண்டார். மூதாட்டியை தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு கொலைகளும் இந்தத் தாக்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையனவா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் முழு விபரமும் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இருப்பினும் இது கொலை அல்ல இயற்கை மரணம்தான் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் துணை பொது இயக்குநரான யுவான் கெண்ட்ரோன் கூறுகையில், தாங்கள் காவல்துறையின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருப்பதால் மனநோயாளிகள் தமது பிரிவை விட்டு வெளியே வந்து கொலை செய்ய இயலாது. எனவே முதல் இரண்டு மரணங்களும் இயற்கையாக நேர்ந்ததுதான் என்றார்.
இந்தத் தகவலை அவர்களின் உறவினர் அனுமதியுடன் தெரிவிப்பதற்கு தாமதமாயிற்று என்றும் இந்த மரணங்களை மறைக்கும் உள்நோக்கம் எதுவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment