உயர்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்
இசெட் புள்ளி முறைமை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் உயர் கல்வி அமைச்சர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இசெட் புள்ளி வௌ;வேறாக கணிக்கப்பட வேண்டும் என தமது கட்சி முன்னர் சுட்டிக்காட்டியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தொடர்பில், தமது கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment