அமெரிக்கா, பிரித்தானிய தூதுவர், தமிழர் தேசிய கூட்டணி ஆகியோர் வடக்கில் இராணுவத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் வடக்கில் இராணுத்தை விலக்க வேண்டும் என்று கேட்கிறார். இதெல்லாம் புலிகளின் பன்னாட்டு இணையத்தள சேவையூடாக செய்து வந்த பிரச்சாரத்தின் விளைவேயாகும். இது மிகவும் பயங்கர நிலைமைக்கு இலங்கையை இட்டுச் செல்லும் என்று கட்டிடவமைப்பு, பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச சமீபத்தில் வென்னப்புவை மாரவிலை பகுதியில் 'திசரபுர' எனப்படும் புரோட்டஸ் திசேரா கிராம வீடமைப்பு திட்ட வீடுளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா இவ்வாறு செயல்படுகின்றது. சமீப காலத்தில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான செயல்பாடுகள் இதனைக் காட்டுகின்றன. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் வடக்கில் இராணுவம் அகற்றப்பட்டமாட்டாது என்று ஜனாதிபதி அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் என்று வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.
போருக்குப் பிறகு வடக்கில் மீள் குடியேற்றம் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றது. 2001-2004 ரணிலின் ஆட்சி காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூடப்பட்டுக் கிடந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் 4% வீதமாக உள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment