ஓரிரு மாதங்களுக்குள் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் முற்றும் முழுதாக வெளியேறுவர்
யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்தில் தனியார் காணிகளில் தங்கியிருக்க இராணுவத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முற்றும் முழுதாக வெளியேறி அரச காணிகளில் அமைக்கப்படும் முகாம்களில் தங்குவர் என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்வாறான காணிகளில் தங்கியிருக்க இராணுவத்தினர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டவற்றை பொதுமக்களிடம் மீண்டும் கையளித்துள்ளதாகவும், யுத்தத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தின் தொகை 70 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும், தெரிவித்த கட்டளைத் தளபதி, எஞ்சியுள்ள இராணுவத்தினர் தங்குவதற்காக அரசாங்க காணிகளில் முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஒருபோதும் இல்லையெனவும், இராணுவத்தினர் காணிகளை ஆக்கிரமிப்பதாக இராணுவத்தினர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுதாகவும், யாழ்.கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment