Monday, June 18, 2012

பொது எதிர்க்கட்சி அமைப்பதில் JVP, UNP முரண்பாடு என்கிறது பொன்சேகா கட்சி.

பொது எதிரிக்கட்சி ஒன்றை உருவாக்க தேசப்பற்றுள்ள பல அமைச்சர்மாரும், அரசாங்க கட்சி பா.உ. தங்களோடு சேர்வதற்கு தமது தலைவர் சரத் பொன்சேகா அவர்களுடன் பேசுவார்த்தை நடாத்த விருப்பதாகவும் அது போல ஐதேக., மவிமு எம்பிக்கள், மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிரிதுங்க ஜயசூரிய ஆகியர்களுடனும் பேச்சு வார்த்தை நடாத்தப்படும் என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பா.உ. ஜயந்த கெட்டேகொட திவயின இதழுக்குக் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் கீழ் பொன்சேகாவின் தேர்தல் அறிக்கை (விஞ்ஞாபனம்) வெளிவருமென்றும் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் பல பா.உ.க்கள் ஜனநாயகத்தை மீளமைத்தல், நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல், இலஞ்சம் ஊழலை ஒழித்தல், 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பதிலாக 17 வது திருத்தத்தை மீளக்கொண்டு வந்து சுதந்திரமான ஆணையங்களுக்கு வழிவகுத்தல் என்பவற்றில் பொன்சேகாவுக்குத் தோள் கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இதே இதழுக்குக் கருத்து தெரிவித்த மவிமு உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க இன்றைய பொருளாதார முறைக்கு எதிரான மாற்று பொருளாதார முறைதான் தேவையென்றும், சிங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரிக்காது இணைக்கும் திட்டம் தான் தேவையென்னும் தாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை அமைத்துள்ளதாகவும் தற்காலிக அல்லது இணைந்த எதிர்கட்சி தேவையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment