பாஹியங்கலவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு எந்தளவு காலம் பழமை வாய்ந்தது?
பாஹியங்கல அகழ்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, எந்தளவு காலம் பழமை வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க, காபன் பரிசோதனையொன்று மேற்கொள்ளப் படவுள்ளதாக, பிரதி புதைப்பொருள் ஆராய்ச்சி பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இப்பரிசோதனைக்கென, காபன் மாதிரிகள் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுமென, தெரிவித்த பிரதி புதைப்பொருள் ஆராய்ச்சி பணிப்பாளர், அகழ்வுகளின் போது பலாங்கொடையிலிருந்த கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 37 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததென, நம்பப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும், இதனை உறுதிப்படுத்துவதற்காகவே, இந்த பரிசோதனை நடாத்தப்படுமென தெரிவித்த அவர், இதுதெற்காசியாவில் கண்டெடுக்கப்பட்ட முதலாவது முழு அளவிலான எலும்புக்கூடாகும். அத்துடன் இதன் பாதுகாப்பிற்கென, விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகள முடிவடையும் வரை அதனை பார்வையிட வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, பொது மக்களிடம் புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களம், வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment