Thursday, June 14, 2012

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க யாழ் கிளைத் தலைவரின் வீடு தாக்கப்பட்டது

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க யாழ்ப்பாணக் கிளைத் தலைவரின் வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு வீட்டினுள் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

யாழ் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க யாழ் கிளைத் தலைவர் டொக்டர் ஜெகநாதன், புற்றுநோய் விசேட வைத்திய நிபுண்ராகக் கடமையாற்றி வருகிறார்.

அண்மையில் யாழ் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேற்கொண்டுவரும் அடாவடித்தனமான நடவடிக்கைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்துவரும் இவர், நேற்று முன்தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'எங்கேயும் எப்போதும்' என்ற சமகால நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு இது தொடர்பாக வெளிப்படையாகவே தனது கருத்தினத் தெரிவித்திருந்தார்.

நேற்றிரவு இவரது வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள், இவரது வீட்டின் ஜன்னல்  கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்ததுடன், வீட்டினுள் கழிவு இயந்திர எண்ணெயை வீசி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இதற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டி,  யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியர்கள் இன்று பகல் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் வைத்தியசாலைப் பணிபாளருக்குத் தொடர்புள்ளதாக யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் நம்புகின்றனர்

No comments:

Post a Comment