விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு விழா(படங்கள்)
நீர்கொழும்பு கல்வி வலயத்தின் விஷேட கல்வி அபிவிருத்திப் பிரிவுகளில் கல்வி பயிலும் விஷேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு இன்று வெள்ளிக்கிழமை (8) துடெல்ல கிறிஸ்துராஜ வித்தியாலய மைதானத்தில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேல் மாகாண விஷேட கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்ரி திசாநாயக்க விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
நீர்கொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவை, நீர்கொழும்பு வலய விஷேட கல்வி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உபாலி மதுரப்பெரும தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் கட்டானை, நீர்கொழும்பு, ஜா-எல ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த விஷேட தேவையுடைய மாணவர்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் உடற்பயிற்சிக் கண்காட்சிகளும் இடம்பெற்றன.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment