ஒப்பந்த அடிப்படையில் மனிதப் படுகொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் தலைவன் ஒருவனை கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகளுடன் சிறப்புப் பொலிஸ் படை பொலனறுவைப் பகுதியில் கைது செய்துள்ளது.
அலுத்கமை சுற்றுலாப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளையிடப்பட்ட இரத்தினக் கற்கள் மற்றும் பெந்தோட்டை வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்ளையிட்ட 16 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இவனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.
கொலை செய்யப்பட்ட கடுவெலை வசந்த எனப்படும் பாதாள உலகத் தலைவனின் உதவியாளன் எனப்படும் இக் கொள்ளையன் சுடுவதிலும் வல்லவன் எனக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment