கஹவத்தையில் தாய் மற்றும் மகளை கொலை செய்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று பெல்மடுல்ல நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டனர். சந்தேக நபர்களான பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரர், சகோதரரின் மனைவி, மற்றும் முச்சக்கர வண்டி சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை அவதானிப்பதற்காக ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
No comments:
Post a Comment