Monday, June 25, 2012

இரட்டை கொலை பிரதான சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர், தொடர்ந்தும் விளக்கமறியலில்

கஹவத்தையில் தாய் மற்றும் மகளை கொலை செய்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று பெல்மடுல்ல நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டனர். சந்தேக நபர்களான பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரர், சகோதரரின் மனைவி, மற்றும் முச்சக்கர வண்டி சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை அவதானிப்பதற்காக ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com