தொப்பிகலை பிரதேசம் மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படவுள்ளது - கிழக்கு கட்டளை தளபதி
புலிகளுக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையின் போது, அழித்தொழிக் கப்பட்ட எல்.ரி.ரி.ஈ யின் முதலாவது மறைவிடமான தொப்பிகலை பிரதேசம், மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப் படவுள்ளதாக , கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டில், அரசாங்கம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது எனவும், கிழக்கு மாகாண கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்த லால் பெரேரா, தொப்பிகலை பிரதேசத்தில் ராணுவ வீரர் நினைவு தூபியொன்று அமைக்கப்படவுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட போர் தளவாடங்களை, மக்கள் கண்டுகளிப்பதற்காக, அருங்காட்சியக மொன்றும் நிர்மாணிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
வீதி கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வது உட்பட, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்துவதன் பொருட்டு, கிழக்கு மாகாணத்திற்கு இலகுவில் செல்லக்கூடிய வாய்ப்பு, ஏற்பட்டுள்ளதாகவும், தொப்பிகல பிரதேசம் மக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அப்பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளும், உல்லாப் பயணத்துறையும் வெகுவாக வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும், கிழக்கு மாகாண கட்டளை தளபதி தெரிவித்துள்ளர்.
0 comments :
Post a Comment