Tuesday, June 26, 2012

கணவனைக் கொன்றவர் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் கைது.

சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெற்ற கொலை சம்பந்தமாக நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர், கொலை செய்யப் பட்டவரின் மனைவி, மனைவியின் சகோதரன், உட்பட நான்கு பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, எமபிலிபிட்டியைச் சேர்ந்தவர் பந்துசேன. அவரின் மனைவி கனேகெதர இந்திராணி (43). இவர்களுக்கு ஒரு பிள்ளையுண்டு. இத்தம்பதியினருக்கு இடையில் சிலகாலம் குடும்பத் தகராறு நிலவியிருக்கிறது. இதனால இந்திராணி மூவருடன் சேரந்து சதி செய்து பந்துசேனவைக் கொலை செய்திருக்கிறார்.

பந்துசேனாவின் தந்தை மரணமடைந்தபோது, தனது தந்தையின் மரணச் சடங்கிற்குக் கூட வராததுடன், நீண்டகாலம் பந்துசேனா ஊரில் இல்லாமல் போனதால் சந்தேகம் கொண்ட பந்துசேனாவின் உறவினர்கள் இது பற்றி மகாவலை பொலிசில் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.

இதன் பிறகு பொலிசாரின் முயற்சியினால் மனைவி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அவர் உண்மையைக் கூறியிருக்கிறார். கொலைக்குப் பயன்படுத்திய கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்ட துபாக்கியையும், தயாரித்தவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment